சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் எதை சாப்பிடலாம்.? என்னென்ன நன்மைகள்.?
Benefits of red and green apples
உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆப்பிள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அதில் சிவப்பு ஆப்பிள் மற்றும் பச்சை ஆப்பிள் என இரு வகைகளாக உள்ளன. அதன்படி எந்த ஆப்பிள் படத்தை யார் சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
சிவப்பு மற்றும் பச்சை இரண்டு ஆப்பிள்களிலும் புரதம் வைட்டமின் தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் பொதுவாக நிறைந்துள்ளது. அதேபோல் இரண்டு ஆப்பிள்களுமே செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரையை அளவு குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது.பச்சை ஆப்பிளில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
பச்சை ஆப்பிளில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்பிற்கு பலம் சேர்க்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கும்.
சிவப்பு ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
சிவப்பு ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வருவதால் வலுவிழந்து பொலிவிழந்து இருக்கும் பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்.
ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் பெக்டின் அதிக அளவில் உள்ளதால் அவை உடலை அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
English Summary
Benefits of red and green apples