வாக்கிங் தெரியும்.. ரிவர்ஸ் வாக்கிங் தெரியுமா..? அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன..?
Benefits Of Reverse Walking
'நான் வாக்கிங் செல்கிறேன்' என்று இப்போதெல்லாம் பலரும் கூற கேட்டு வருகிறோம். இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பேஷனாக மாறியுள்ள இந்த வாக்கிங் எனபது வெறும் 'நடப்பது' மட்டுமல்ல. அது ஒரு கார்டியோ பயிற்சியும் கூட.
தினசரி ஒரு 10 முதல் 20 நிமிடங்கள் நடந்தாலே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நடப்பதால் உடலின் ஒட்டுமொத்த இயக்கங்களும் இதன் மூலம் சீராக இருக்கும்.
அதிலும் குறிப்பாக 'ரிவர்ஸ் வாக்கிங்' எனப்படும் பின்னோக்கி நடக்கும் பயிற்சியை மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. பின்னோக்கி நடப்பதால் கால் தசைகள் வலிமையானதாக மாறும். கால்களின் பின்புறம் உள்ள தசைநார்களின் வலிமை அதிகரிக்கும்.
அதேபோல் பின்னோக்கி நடக்கும் போது நமது நடை ஒரே மாதிரி சீராகவும், நிதானமாகவும் இருக்கும். மேலும் பின்னோக்கி நடக்கும்போது சிறிது தூரமே நடந்தாலும் அதிக கலோரிகளை எரிக்க முடியும். மேலும் தொடர்ந்து ரிவர்ஸ் வாக்கிங் செய்வதால் கார்டியோ வாஸ்குலர் ஆரோக்கியம் மட்டுமல்லாது சுவாசத் திறனின் ஆரோக்கியமும் மேம்படும்.
சுவாச சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளும் குறைவதோடு, நுரையீரலும் பலப்படும். தொடை மற்றும் கால் தசைகளின் நெகிழ்வுத் தன்மை அதிகரிப்பதால் கால் வலியோடு, இடுப்பு வலியும் குறையும். மூச்சுக் குழாயில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த 'ரிவர்ஸ் வாக்கிங்' எனப்படும் பின்னோக்கி நடக்கும் முறையில் தினமும் நடக்கலாம். இதனால் இவர்கள் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
English Summary
Benefits Of Reverse Walking