நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.!
one month jail penalty to actor sv sekar
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சித்து ஒரு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடத்தின.
மேலும் எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து வந்தது.
அதன் படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இன்று உறுதி செய்துள்ளார். அத்துடன் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
one month jail penalty to actor sv sekar