அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு; முதலமைச்சர் உத்தரவு..!
Pongal gifts to government employees
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2023- 2024 ஆம் ஆண்டிற்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், சி,டி பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.
அத்துடன், சி, டிபிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசும் வழங்கப்படுகிறது.
English Summary
Pongal gifts to government employees