அர்ஜுனா விருது பெரும் மூன்று தமிழக வீராங்கனைகள் உள்ளிட்ட 32 வீர, வீராங்கனைகள் பட்டியல் உள்ளே..! - Seithipunal
Seithipunal


விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதில் அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 03 தமிழக வீராங்கனைகள் உள்பட 32 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகிய வீராங்கனைகள் அர்ஜுனா விருதை பெறவுள்ளனர். 

அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரர்- வீராங்கனைகளின் பெயர்கள் பின்வருமாறு; 

1. ஜோதி -யர்ராஜி தடகளம் 
2. அன்னு -ராணி தடகளம் 
3. நிது -குத்துச்சண்டை 
4. சவீட்டி -குத்துச்சண்டை
5. வந்திகா அகர்வால் -செஸ் 
6. சலிமா டெட் -ஹாக்கி 
7. அபிஷேக் -ஹாக்கி 
8. சஞ்சய் -ஹாக்கி 
9. ஜர்மன்ப்ரீத் சிங் -ஹாக்கி 
10. சுக்ஜீத் சிங் -ஹாக்கி 
11. ராகேஷ் குமார் பாரா -வில்வித்தை 
12. ப்ரீத்தி பால் பாரா -தடகளம் 
13. ஜீவன்ஜி தீப்தி -பாரா தடகளம்
14. அஜீத் சிங் -பாரா தடகளம்
15. சச்சின் சர்ஜேராவ் கிலாரி -பாரா தடகளம் 
16. தரம்பிர் -பாரா தடகளம் 
17. பிரணவ் சூர்மா -பாரா தடகளம் 
18. எச் ஹோகடோ செமா -பாரா தடகளம் 
19. சிம்ரன் -பாரா தடகளம் 
20. நவ்தீப் -பாரா தடகளம் 
21. நிதேஷ் குமார் -பாரா பேட்மிண்டன் 
22. துளசிமதி முருகேசன் -பாரா பேட்மிண்டன்
23. நித்யா ஸ்ரீ சுமதி சிவன் -பாரா பேட்மிண்டன் 
24. மனிஷா ராமதாஸ் -பாரா பேட்மிண்டன் 
25. கபில் பர்மர் -பாரா ஜூடோ 
26. மோனா அகர்வால் -பாரா ஷூட்டிங்
27. ரூபினா பிரான்சிஸ் -பாரா படப்பிடிப்பு 
28. ஸ்வப்னில் சுரேஷ் குசலே -படப்பிடிப்பு 
29. சரப்ஜோத் சிங் -துப்பாக்கி சூடு 
30. அபய் சிங் -ஸ்குவாஷ் 
31. சஜன் பிரகாஷ் -நீச்சல் 
32. அமன் -மல்யுத்தம்

அத்துடன், அர்ஜுனா வாழ்நாள் சாதனையாளர்கள் விருதில் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். 

அதில், தடகளத்தில் சுச்சா சிங்கும், பாரா நீச்சல் போட்டியில் இடம் பெற்ற முரளிகாந்த் ராஜாராம் பெட்கருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பட்டியலில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். அந்தவகையில்,

பயிற்சியாளரின் பெயர்; 
1. சுபாஷ் ராணா -பாரா ஷூட்டிங் 
2. தீபாலி தேஷ்பாண்டே -துப்பாக்கி சூடு 
3. சந்தீப் சங்வான் -ஹாக்கி

வாழ்நாள் விருது; 

பயிற்சியாளரின் பெயர்; 
1. எஸ் முரளிதரன் - பூப்பந்து 
2. அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ - கால்பந்து

அதன்படி செஸ் வீரரும் தமிழக வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. விளையாட்டு துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjuna Award announcement for 32 people including 3 Tamil Nadu players


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->