உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா.?
Benefits of sesame oil
ஆரோக்கியமான நல்லெண்ணெயில் சீசேமோல் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்க்கும்போது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து நோய்கள் எதுவும் வராமல் தடுக்கிறது.
நல்லெண்ணையில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் மற்றும் இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரழிவு நோய் ஏற்படுவதை தடுக்கும்.
மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவின் சேர்த்து சாப்பிடும் போது குடல் இயக்கமானது சீராக செயல்படும். மேலும் செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
நல்லெண்ணெயில் ஜிங்க் கனிம சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமென்றால் கால்சியம் உணவுகளுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணையால் வாயை கொப்பளித்தால் பற்களில் தங்கி இருக்கும் பல் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிக அளவு புரோட்டின் நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சிறந்த உணவு பொருள்.
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் நல்லெண்ணெய் கொண்டு வயிற்றில் மசாஜ் செய்தால் ஸ்ரெட்ச் மார்க் ஏற்படுவதை தடுக்கும்.
நல்லெண்ணெயில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெய் சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.