நெய்யுடன் இதை சேர்த்தால்.. உருவாகும் சூப்பர் பவர்..! ஆண்களுக்கு அருமருந்து.!   - Seithipunal
Seithipunal


திப்பிலி, மிளகு வகையைச் சேர்ந்த ஒரு மூலிகை தாவரமாகும் இது புதர் போல் மண்டி வரும் குணமுடைய பல பருவச் செடியாகும்

திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

திப்பிலிப்பொடியையும்  கடுக்காய்ப்பொடியையும்  சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலையும் , மாலையும்  என தொடர்ந்து இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய் நீங்கும்

திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, முப்பிணி நீங்கும்.

திப்பிலியை பொடி 1பங்கும் 2 பங்கு  வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். சுக்கின்  மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும், பிறகு  மிளகு திப்பிலி இரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்து  எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடி  செய்து  பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர இருமல்,ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம் பசியின்மை தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.

மூட்டு வலியால் அவதியா.?! கவலை வேண்டாம் இதை செய்து பாருங்கள்...! -  Seithipunal

திப்பிலி, மிளகு, சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்றவை குணமாகும், இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்
சுவாச பிரச்சனைகளை சரிசெய்யும்

திப்பிலி சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். தேனுடன் கலந்த திப்பிலி பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

குழந்தைகளின் குடலில் இருக்கும் புழுக்களை அகற்றும் மேலும் குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலிப் பொடியை கலந்து கொடுத்தால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும்.

பசுவின் பாலில் திப்பிலிப் பொடியை சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி போன்றவை நீங்கும். திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமான திறன் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of thippili for men 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->