வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.!
Benefits of venthayam
சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம். வெந்தயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அந்த நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து தேநீர் போல் பருகலாம் அல்லது அப்படியேவும் குடித்துவிடலாம்.
இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினசரி தேநீர் போல் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்மைகள் :
வெந்தயம் பெருங்குடல் நோய்களுக்கு மட்டுமில்லாமல் நீரழிவு நோய்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.
நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்னைகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உடனடி வீட்டு வைத்தியமாக வெந்தயம் இருக்கிறது.
வெந்தயம் நமது உடலில் உள்ள ஃபிரீ ரேடிக்கல்களை அழித்து உங்களை இளமையாக வைத்து கொள்ள உதவும். வெந்தய கீரையை தசை வலி, வீக்கம் உள்ள இடங்களில் வைத்து கட்டினால் வலி குறையும் என்று கூறப்படுகிறது.