வெயில் சூட்டை தணிக்கும் ''சியா விதைகள்'' சாப்பிட்டால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


தற்போது கோடை காலம் என்பதால் உடலை குளிர்ச்சி செய்வதற்காக குளிர்பானங்கள் குடிப்பது வழக்கம். இதில் சியா விதைகளை சேர்த்து குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். இதை முதலில் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் உட்கொள்ள வேண்டும். சியா விதைகளில் நமது உடலுக்கும் மனதிற்கும் வளம் தரக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளது. 

சியா விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதிலுள்ள நார்ச்சத்து கரையும் தன்மை கொண்டது. நமது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு சியா விதைகள் உணவாக பயன்படுகிறது. 

இதனால் குடல் ஆரோக்கியமடையும். தினமும் சியா விதைகள் சாப்பிடுவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க சியா விதைகள் உதவுகிறது. 

உடல் உறுப்புகளின் வீக்கம் குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகரிக்க பயன்படுகிறது. சியா விதைகளில் கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளதால் எலும்புகள் வலுப்பெறும். 

உடலில் உள்ள செல்கள் மீது உள்ள கிருமிகளை அழிப்பதற்கு சியா விதைகளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துகள் பயன்படுகிறது. சியா விதைகள் வயது முதிர்வை தடுக்கிறது. இதில் புரதம் அதிக அளவில் உள்ளதால் பசி உணர்வு கட்டுப்படும். சியா விதைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது. 

சியா விதைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிக அளவில் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கோடை காலங்களில் உடலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் சியா விதைகள் அருமருந்தாக உள்ளது. இதனை உட்கொள்வதால் வாதம், பித்தம், கபம் போன்றவை குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chia seeds health benefits


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->