தீராத நெஞ்சு சளிக்கு.. சிம்பிளான சூப்பரான டிப்ஸ் இதோ.!
Cold problems solved
Cold Problem solved குளிர்காலத்தில் இருமல், தொண்டை வலி, சளி உள்ளிட்டவை பொதுவாக அனைவருக்கும் ஏற்படும்.
இந்த கால கட்டத்தில் சிலருக்கு நெஞ்சு சளி அதிகமாக இருக்கும். இது நுரையீரலில் ஏற்படுகின்ற ஒரு விஷயம். உடல் ஆரோக்கியமாக இருக்க சளி வேண்டும் தான்.
நமது நுரையீரலுக்குள் தூசி துகள்கள் நுழைவதை இந்த சளி தடுக்கிறது. பாக்டீரியாவுக்கு எதிராக இது இருக்கின்றது. ஆனால், இது அதிகப்படியாக இருந்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதைத்தான் ஜலதோஷம் என்று கூறுவார்கள்.
சளி, தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
நெஞ்சு சளி அதிகமாக இருக்கும் போது இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இஞ்சி டீ நல்லா பலன் கொடுக்கும்.
வெங்காயம் தொண்டை வலிக்கு மிகவும் நல்லது வெங்காயத்தை நன்றாக அரைத்து ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து இந்த தண்ணீரை அன்றாடம் 3 ஸ்பூன் அளவு குடித்து வந்தால் நெஞ்சு சளி சீக்கிரமாக வெளியேறும்.