கொத்தமல்லி இலை அழுகாமல் இருக்க இப்படி செய்யுங்கள்.!
coriander leaf benefits in tamil
சமையலுக்கு பயன்படுத்துகின்ற கொத்தமல்லி இலைகள் வெகு சீக்கிரத்தில் வாடிவிடும். இதனை நாம் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்து இருந்தாலும் கூட அழுகி விடக்கூடும். சில எளிய வழிகளை ஃபாலோவ் 2 வாரம் வரை வீணாகாமல் பாதுகாக்க முடியும்.
கொத்தமல்லி தழைக்கட்டின் வேர் பகுதியை நறுக்கி விடலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் குறிப்பிட்டளவு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கொத்தமல்லி இலையை சற்று நேரம் அதில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின், நன்கு கழுவி விட்டு பின் மின் விசிறியில் உலாத்தவும்.

நீர்த்துளிகள் எதுவுமில்லாமல் நன்றாக உலர்த்தி விட்டு ஒரு பேப்பர் டவலில் ஒற்றி எடுத்துக் கொண்டு பின்பு கொத்தமல்லி தழையை பேப்பர் டவலில் சுற்றி மூடி விட்டு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அந்த டப்பாவை எடுத்து பிரிட்ஜில் வைத்து சமையலுக்கு தேவைப்படும் பொழுது கொத்தமல்லி தழையை எடுத்து பயன்படுத்தலாம். சுமார் 2 வாரங்கள் வரை கொத்தமல்லி இலை அழுகி விடாமல் இருக்கக்கூடும்.
English Summary
coriander leaf benefits in tamil