சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? மருத்துவ விளக்கம் இதோ.!
Diabetic patients should drink Coconut
இளநீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி தரும் என்று கூறுவதில் மாற்று கருத்துகள் இருந்திடவே முடியாது.
இளநீர் நமது உடலை ஹைட்ரேட் செய்து உடனடியாக நமக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. தேங்காய் நீரில் இயற்கையாக உள்ள சர்க்கரையும், லேசான இனிப்பும் , இருப்பதால் அதனை நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்த வண்ணமாக உள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது, "பாலை விட இளநீரிலே அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஏனெனில், அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாக உள்ளது. எனவே இதை நீரிழிவு நோயாளிகள் பருகினால் எந்த வித பாதிப்பும் இல்லை.
மேலும் கொழுப்பின் அளவும் மிகக் குறைவாக உள்ளது. இளநீர் உட்கொள்பவர்களுக்கு சோடியம், பொட்டாசியம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உடலுக்கு கிடைக்கின்றன.
இளநீர் குடிப்பதால் நச்சுக்கள் வெளியேறி பல நோய்களின் அபாயம் தவிர்க்கப்படுகிறது. இளநீரைக் குடிப்பதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து , அற்புத சக்தியும் கிடைக்கிறது " என கூறியுள்ளனர்.
English Summary
Diabetic patients should drink Coconut