டாக்டர்கள் அதிர்ச்சி!!! நுரையீரலில் சிக்கிய பேனா மூடியுடன் 21 ஆண்டுகளாக வாழ்ந்த வாலிபர்.....
Doctors shocked A teenager lived with a pen cap stuck in his lung for 21 years
தெலுங்கானா மாநிலம் திருப்பதி கரீம் நகரைச் சேர்ந்த 26 வயது வாலிபர். அவருக்குத் திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய உடல் மோசமான நிலையை எட்டியது. உடனடியாக அவரின் குடும்பத்தினர் மாதப்பூரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அவரைக் கொண்டு சேர்த்தனர்.

மருத்துவர்கள் அதிர்ச்சி:
அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது, நுரையீரலில் கட்டிப் போன்ற அமைப்பு இருந்ததைக் கண்டனர். இதைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவைச் சிகிச்சையின் போது வாலிபரின் நுரையீரலில் இருந்தது பேனா மூடி எனத் தெரிய வந்தது. இதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவைச் சிகிச்சை மூலம் மூடியை அகற்றிய மருத்துவர்கள்,இது குறித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

21 ஆண்டுபேனா மூடி:
அப்போது அவர்கள் கூறியது, "அந்நபர் ஐந்து வயது குழந்தையாக இருந்த போது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டதாகவும், அதன்பின்பு எந்தப் பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை " எனத் தெரிவித்துள்ளனர். 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார் என்பதை அறிந்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது அந்நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Doctors shocked A teenager lived with a pen cap stuck in his lung for 21 years