டிராகன் பழத்தில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்.!
dragon fruit medicinal properties
* டிராகன் பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
* டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து வெளியேற்றும்.
* டிராகன் பழத்தில் 90 சதவீதம் நீரும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலை அதிக நேரம் பசி இல்லாமல் வைத்திருக்கும். அதிகம் உணவு உண்ணுவதையும் தடுக்கும்.
* டிராகன் பழத்தில் உள்ள சத்துகள் செரிமான உறுப்புகள் சிக்கல் இன்றி செயல்பட உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படாது.
* டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சு குழாய் கோளாறுகளை குணப்படுத்தும்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் டிராகன் பழத்தை உட்கொள்ளும் பொழுது ரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரும்பு சத்து அதிகரிக்கும். டிராகன் பழம் அடிக்கடி உட்கொள்வதால் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.
English Summary
dragon fruit medicinal properties