குளிர்காலத்தில் பிடிங்கி எடுக்கும் பல்வலிக்கு.. இதோ ஈசியான தீர்வு.!
Easy to cure teeth pain
குளிர்காலத்தில் சளி, இருமலுக்கு அடுத்து பலருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடிய நோய் பல் வலி தான். இந்த பல் வலியை குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துவதை எப்படி என பார்க்கலாம்.
பூண்டை உரித்து அப்படியே வலி உள்ள இடத்தில் வைத்திருப்பதன் மூலம் பல் வலி சிறிது நேரத்தில் குறைவதை நீங்கள் உணரலாம்.
கிராம்பு தைலத்தை பல் வலி எடுக்கும் இடங்களில் ஊற்றி வைத்திருந்தால் சற்று நேரத்தில் பல்
வலி இல்லாமல் போகும். அருகம்புல்லை வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி இருக்கும் இடத்தில் அந்த சக்கையை வைத்திருந்தால் பல் வலி சரியாகும்.
எலுமிச்சம் பழத்தில் சாறு எடுத்து அதில் பெருங்காயத்தை கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி சரியாகும்.
கொய்யா இலைகளை மென்று பல்வலி இருக்கும் இடத்தில் வைத்திருந்தால் சற்று நேரத்தில் பல் வலி குறைவதை காண முடியும்.
சொத்தை பற்கள் ஏற்படாமல் இருக்க இனிப்பு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அத்துடன் ஒரு நாளைக்கு காலை, இரவு இரு வேலையும் பல் விலக்கி பற்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.