வெள்ளை சர்க்கரை உடலுக்கு கேடா?
effects of white sugar
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் ஒரு பொருளாக சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரையை டீ, காபி மட்டுமின்றி, பஜ்ஜி, கேக், ரொட்டி, மயோனைஸ், சாஸ், குளிர் பானங்கள் மற்றும் சாலட்கள் போன்றவற்றிலும் சேர்த்து உண்ணப்படுகிறது.
இந்த சர்க்கரையால் உங்கள் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இஞ்சுக்கு காண்போம்.
* அதிகப்படியான சர்க்கரை உடலுக்குள் செல்வதால், வாயு, நெஞ்செரிச்சல், கொழுப்பு, கல்லீரல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
* ரொட்டி அல்லது கேக் மூலம் உடலுக்குள் செல்லும் சர்க்கரையால், வயதான தோற்றம், முகப்பரு, சுருக்கம் போன்ற பிரச்சனைகளும் தோன்றும்.
* உங்கள் உடலில் கூடுதல் சர்க்கரை சேர்ப்பதால் கால் மற்றும் பாதங்களில் கூடுதல் வலி ஏற்படும்.
* அதிகப்படியான சர்க்கரை இதய திசுக்களை சேதப்படுத்தும். அதுமட்டுமின்றி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.