கண்களை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்.!
eyes protect tips in tamil
நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளின் ஒன்றாக கண்கள் உள்ளது. இன்றைய காலகட்டங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.
இந்த பதிவில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். * கண்களை பாதுகாக்க கீரை உணவுகளை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்ற வைட்டமின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.
* முட்டை, வெண்ணெய் இரண்டும் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது நல்லது. கண்களை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். பயணத்தின் போது படிப்பதை தவிர்ப்பது கூடாது. நல்ல வெளிச்சத்தின் அமர்ந்து படிக்க வேண்டும்.
* கண்களின் பாதுகாப்புக்கு தினந்தோறும் கண்களை மூடி மெதுவாக விரல் நுனிகளால் கண் இமைகளை அழுத்தி விட வேண்டும். இது போல் தினமும் 10 முறை செய்தால் கண் இமைகளில் உள்ள சுரப்பிகளை தூண்டி கண்ணீர் சுரப்பை அதிகரிக்கும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை 20 வினாடிகள் கண்களை செய்தால் கண்களின் தசைகள் தளர்ந்து கண் அழுத்தம் குறையும்.
* வெளியில் செல்லும்போது சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணியலாம் .காற்று அதிகமாக வீசும் பொழுது பாதுகாப்பாக கண்ணாடி அணிய வேண்டும். கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து கண் ரத்த அழுத்தத்தை குறைத்தால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். கணினி, போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கண் நோய்கள் ஏதேனும் உள்ளதா என ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
English Summary
eyes protect tips in tamil