குழந்தை பிறப்பிற்கு பின்னான முதல் மாதவிடாய்... சந்தேகமும்... தீர்வும்..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலான பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் ஏற்படவிருக்கும் மாதவிடாய் சுழற்சி குறித்து குழப்பமும் கவலையும் அடைவது இயல்பான ஒன்றாகியுள்ளது. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒன்பது மாதம் மாதவிடாய் இல்லாமல் இருந்திருக்கும் நிலையில், தாயான பின்னர் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் ஆச்சரியமாக இருக்கும். இந்த சமயத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் தாய்ப்பாலூட்டும் சமயத்தில் மாதவிடாய் பாதிப்பு குறித்த காரணங்களையும் விரிவாக காணலாம். 

கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ஒன்பது மாதங்கள் மாதவிடாய் ஏற்படமால் இருக்கும் என்பது இயற்கையான ஒன்றே. இந்த தருணத்தில், நாப்கின்களின் தொல்லைகளில் இருந்து சற்று விலகி நிம்மதியாக இருப்பார்கள். ஒன்பது மாதங்கள் விடுதலையில் இருப்பினும், பிரசவத்திற்கு பின்னர் மாதவிடாய் எந்த சமயத்திலும் ஏற்படும். மாதவிடாய்க்கு பின்னான நாட்களில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் நாளானது தேதி மற்றும் கால நேரத்தை குறிக்க இயலாது. பெண்ணின் உடலில் அவர்களுக்கான தனியொரு அட்டவணை இயங்கி வருகிறது.

குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் சமயத்தில் அதிகபட்சம் 7 மாதம் முதல் 8 மாதமானது மாதவிடாய் நீடிக்கும். இதில் சில பெண்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னரே மாதவிடாய் ஏற்படும். இதனால் சில பெண்கள் கவலைக்கு உள்ளாவதும் உண்டு.. இதனால் கவலையுற தேவையில்லை. பொதுவாக குழந்தை தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்திலேயே உறங்க துவங்கி, பின்னர் அதிக நேரம் உறங்கும் பட்சத்தில் மாதவிடாய் விரைவில் வாய்ப்புள்ளது. 

பெண்களின் குழந்தையானது திட வகை உணவுகளை சாப்பிட துவங்கும் பட்சத்தில், மாதவிடாய் முடிவடைய போவதற்கான அறிகுறிகளாகும். மேலும், தாய்ப்பாலூட்டும் சமயங்களில் இரத்த கறைகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மிகவும் சாதாரணமான நிகழ்வுதான் இரத்தக்கறை இருப்பது. இக்கரைகளுக்கு நேரம் ஏதும் கிடையாது. பொதுவாக குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் முதல் மாதவிடாயானது மகப்பேற்று மாதவிடாய் என்று கூறப்படும். 

மகப்பேற்று மாதவிடாயானது உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தத்தை குறிக்கும். இது பெண்களின் வழக்கமான மாதவிடாயை காட்டிலும், அடர்சிவப்பு நிறம் மற்றும் அதிகளவில் இருக்கும். இந்த சமயத்தில், பெண்கள் உபயோகம் செய்யும் வழக்கமான நாப்கின்கள் சுமார் 4 மணிநேரங்கள் மட்டுமே தனது பயனை தரும். இதனால் நாப்கின்களை அடிக்கடி மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first period after baby delivery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->