நம் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உணவு பொருட்கள்..! கிட்னியை பாதுகாக்க இதை சாப்பிடுங்கள்.!
Foods to increase blood production
பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்கள் ஊறவைத்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் சேரும். புதிய பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் இதயத்திற்கு மிகுந்த பலம் கிடைப்பதுடன், உடலில் ரத்தமும் அதிகரிக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால், புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
கொய்யா பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச்சத்து குறைவாக இருந்தாலும், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் கொய்யாவில் 210 மி.கி வைட்டமின் சி உள்ளது.
இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி அவசியம். இதில் கலோரி உள்ளடக்கம் 51 மற்றும் நார்ச்சத்து 5.2%. 100 கிராம் கொய்யாவில் கொஞ்சம் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது. இதில் 27 மி.கி இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஊற வைத்த கருப்பு உலர் திராட்சையினை தினமும் 4 எடுத்துக் கொள்ளலாம். பீர்க்கங்காயினை வாரம் இரண்டு முறையும், நெல்லிக்காயினை தினமும் ஒன்று எடுத்துக் கொண்டால் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
English Summary
Foods to increase blood production