வில்வ மரத்தின் மகத்துவங்கள்..!! - Seithipunal
Seithipunal


மஞ்சள் காமாலை நோயால் அவதியுற்று வரும் நபர்கள் வில்வ மரத்தில் இருக்கும் இளம் வில்வ இலைகளை சுமார் 10 கிராம் முதல் 15 கிராம் அளவு இருக்குமாறு எடுத்துக்கொண்டு., அதோடு சுமார் 10 மிளகை சேர்த்து அரைத்து இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயானது குணமடையும். 

இரத்த சோகை பிரச்னையால் அவதியுறும் நபர்கள் வில்வ பழத்தை காயவைத்து பொடியாக அரைத்து பசும்பாலில் சேர்த்து காய்ச்சி தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையானது குணமடையும். 

கர்ப்பமான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல்., இரத்த சோகை பிரச்சனையை நீக்குவதற்கு ஒரு தே.கரண்டி அளவிற்கு வில்வ பழத்தின் பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும். 

வில்வ மரம், வில்வ காய், வில்வ மர இலை,

டைபாய்டு நோயை குணப்படுத்துவதற்கு வில்வ இலையை நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குழம்பு போன்று சுண்டும் பக்குவத்தில் வந்தவுடன்., தேனை சேர்த்து மூன்று வேலை என்று தினமும் சாப்பிட்டு வந்தால் டைபாய்டு நோயானது உடனடியாக குணமடையும்.

ஞபாக சக்தியை அதிகரிப்பதர்க்கு வில்வ பழத்தை எடுத்து அதனுடன் கற்கண்டை சேர்த்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்னதாக சாப்பிட்டு வந்தால் மனது அமைதியாகி., நமது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

சர்க்கரை நோயால் அவதியுறும் நபர்கள் தினமும் ஐந்து இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயானது உடனடியாக குணமாகும். வில்வப்பழத்தை பொடியாக அரைத்து வைத்து சுமார் 10 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு 50 கிராம் நெய்யுடன் மஞ்சள் சேர்த்து நீரில் கலந்து பருகி வந்தால்., எலும்பு முறிவு பிரச்சனையானது உடனடியாக நீங்கும்.

tamil online news : Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOOD THINGS OF VILVA MARAM


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->