விலை அதிகம் கொண்ட க்ரீன் டீயை இப்ப வீட்டிலேயே தயாரிக்கலாம்.! எடை குறைய உதவும்.!
Green Tea preparation at Home
நீண்ட நாள் ஆரோக்கியமாக இளைமையாக புத்துணர்வுடன் இருக்க தினமும் காலையில் கிரீன் டீயுடன் ஆரம்பிப்பது சிறந்த வழிகளில் ஒன்று. கிரீன் டீ அருந்துவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை, கொழுப்பை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.
சரி கிரீன் டீ தூள் வீட்டில் செய்ய முடியுமா? என்றக் கேள்விக்கு பலருக்கும் இருக்கும். ஆனால், செய்யலாம். அது எப்படியென பார்ப்போம்.
கிரீன் டீ தூள் செய்ய தேவையான பொருள்கள்:
ஒரு கொத்து - துளசி இலை
லெமன் க்ராஸ் - சிறிது
100 கிராம் - இஞ்சி.
செய்முறை:
துளசி மற்றும் லெமன் க்ராஸின் இலைகளை ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் நன்றாக வெய்யிலில் இரண்டு நாட்களுக்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக காய்ந்தவுடன் மிக்ஸர் அல்லது பிளன்டரில் இட்டு நன்றாக பொடித்து ஒரு காற்று புகாதா ஜாடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து இந்த கிரீன் டீ தூளை தேவையான அளவுப் போட்டு கொதிக்க வைத்து உங்கள் விருப்த்திற்கேற்ற இனிப்பு அல்லது தேன் கலந்து அருந்தலாம்.
English Summary
Green Tea preparation at Home