சொந்த மண்ணில் சொதப்பிய ஆர்சிபி; குஜராத் அணி இலகு வெற்றி..!
Gujarat team easily defeated RCB team
ஐபிஎல் தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். அர்ஷத் கான் வீசிய பந்தை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்ற விராட் கோலி, பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 04 ரன்களில் சிராஜ் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக சால்ட் 14 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரஜத் படிதார் 12 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இதில், சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த குருணால் பாண்ட்யா 05 ரன்னில் ஆட்டமிழந்தார்.

லிவிங்ஸ்டன் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் அணியின் கேப்டன் கில் 14 ரன்களில் ஆட்டமிழக்க, சாய்சுதர்சன் 49 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பந்துகளை சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்குமாக பறக்க விட்ட பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 39 பந்துகளில்73 ரன்கள் எடுத்தார். செர்ப்பன் ரத்தபோர்ட் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் குஜராத் அணி 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
English Summary
Gujarat team easily defeated RCB team