கள்ளக்காதல் விவகாரம்: அப்பாவி மனைவி தற்கொலை! கணவன், மாமியார், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை! அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Cuddalore Wife death case judgement
அரியலூர் மகளிர் நீதிமன்றம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில், கணவன், மாமனார், மாமியாருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடலூர் மாவட்டம், லால்பேட்டை அடுத்த எள்ளேரி கிராமத்தை சேர்ந்த சச்சிதானந்தம், தனது மகள் வைஷ்ணவி (27 வயது)-யை, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (35 வயது) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
தினேஷ் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாக வைஷ்ணவி சந்தேகம் கொண்டார்.
இது குறித்து கணவனை கண்டித்தபோது, தினேஷும், அவரது தந்தை நடராஜன் (65 வயது), அம்மா ஜோதி (53 வயது) ஆகியோரும், "விருப்பம் இருந்தால் வாழு, இல்லையெனில் இறந்து விடு" என அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வைஷ்ணவி 2022-ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பாக அவரது தந்தை சச்சிதானந்தம் அளித்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீஸார் தினேஷ், நடராஜன், ஜோதி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.செல்வம், மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்தார். இதையடுத்து, மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
Cuddalore Wife death case judgement