வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?!
Health Benefits Of Eating Papaya in Empty Stomach
காலை உணவு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால் தான் நீண்ட காலம் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே காலையில் வெறும் வயிற்றில் சில பழங்களை சாப்பிட்டால் நாள் முழுக்க உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். அந்த வகையில் பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பப்பாளியில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது செரிமான அமைப்பு வலுவாகும். மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் காக்கும். அஜீரணப் பிரச்சினைகளை நீக்குவதோடு, வயிற்றை சுத்தப்படுத்தும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கண்ணை மூடிக் கொண்டு காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடலாம். இதில் குறைந்த அளவே கலோரி உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். பசியைக் கட்டுப்படுத்தும்.
மேலும் பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. எனவே பப்பாளியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலை எந்த தொற்று நோய்களும் அண்டாமல் பாதுகாக்கும்.
உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்தால், அல்லது நீரிழிவு மற்றும் இதய பிரச்சினைகள் இருந்தால் பப்பாளியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். இந்த பப்பாளியானது உடலில் உள்ள கெட்ட கொலஸ்டராலின் அளவைக் குறைத்து இந்த நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து, உங்கள் ரத்த அழுத்தப் பிரச்சினைகளுக்கு அருமருந்தாகிறது.
English Summary
Health Benefits Of Eating Papaya in Empty Stomach