முடி உதிர்வு, தூக்கமின்மை, மாத விடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும் இயற்கை வரப் பிரசாதம் "பெருஞ்சீரகம்" - அதை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா?! - Seithipunal
Seithipunal



பெரும்பாலும் உணவகங்களில் சாப்பிடச் செல்லும்போது உணவுக்குப் பின்னர் சோம்பு எனப்படும்  பெருஞ்சீரகத்தை உண்ணக் கொடுப்பார்கள். குறிப்பாக அசைவ உணவகங்களில் இந்த சோம்பு உணவுக்குப் பின் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 

இந்த பெருஞ்சீரகம் அசைவ உணவுகளை உண்ட பின் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது என்ற வகையில் தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இதுகுறித்து இங்கு காண்போம். 


1. நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் இரவு உணவுக்குப் பின் கண்டிப்பாக பெருஞ்சீரகத்தை  தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 

2. முடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்களும், மாத விடாய் கால பிரச்சினைகள் உள்ளவர்களும் பெருஞ்சீரகத்தை உணவுக்குப் பின் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 

3. வாய் துர்நாற்றப் பிரச்சினை இருந்தால் தினமும் 3 அலலது 4 முறை ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டும். 

4. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், கண் பார்வையில் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து பெருஞ்சீரகம் சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சினைகள் தீரும்.

5. பெருஞ்சீரகம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும். 

6. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. 

7. மேலும் இதில் நிறைந்துள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகளால், பல்வேறு அலர்ஜிகளில் இருந்து பாதுகாக்கும். 

8.  பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க சோம்பை தினமும் சாப்பிடலாம். 

9. மேலும் கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த பெருஞ்சீரகம் அருமருந்தாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Benefits Of Fennel Seeds


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->