சளி, இருமல், நீரழிவு நோயினால் அவதியா.? அருமருந்தாகும் காட்டு துளசி! - Seithipunal
Seithipunal


நாம் வீட்டில் வளர்க்கும் துளசி செடி நமக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது அதே அளவு நன்மைகளை காட்டில் வளரும் துளசியும் வழங்குகிறது. காட்டில் வளரும் துளசியானது வனத்துளசி என அழைக்கப்படுகிறது.

இதன் முக்கிய பயன்களில் ஒன்று சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாகும்  இந்த துளசி சாறை மிதமான வெந்நீருடன் சேர்ந்து பழகும் போது சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. 

தொற்றுக்கிருமிகளால் ஏற்படும் சளி, இருமல் மற்றும் அலர்ஜி போன்றவற்றிற்கு இந்த துளசி ஒரு அருமருந்தாகும். இதன் நறுமணம்  தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

இவற்றின் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு குடித்து வர அஜீரண  தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும் வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளில் இருந்தும்  தீர்வு கிடைக்க உதவுகிறது.

இந்த துளசியின் மற்றும் ஒரு முக்கியமான குணம் இது சர்க்கரை நோய்க்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது . தேயிலையுடன் ஒரு சில இலைகளை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

காட்டு துளசி என்று அழைக்கப்படும் வனத்துளசி காய்ச்சலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். இதன் இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்து வர காய்ச்சலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of wild thulasi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->