குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற 'அருமருந்து' துளசி ரசம் - செய்முறையைத் தெரிந்து கொள்வோமா..?! - Seithipunal
Seithipunal



தற்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாதாரண சளி, இருமல் முதற்கொண்டு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும். இதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சளி, இருமலுக்கு அருமருந்தாகும் துளசியைப் பயன்படுத்தி ரசம் செய்யும் முறையைத் தெரிந்து கொள்வோம். 

துளசி ரசம் செய்யும் முறை :

1 கப் துளசி இலைகளை நன்கு சுத்தமாகக் கழுவி மிக்சியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு 1 எலுமிச்சைப் பழ அளவு புளியை ஊறவைத்து கரைத்து,  அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவேண்டும். 

பின்னர் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள் தலா 1 ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த பேஸ்ட்டை புளிக்கரைசலுடன் கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர் இந்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், அதில் தனியாக அரைத்து வைத்துள்ள  துளசியையும் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவேண்டும். பின்னர் இந்த கலவை நுரை போல் பொங்கி வரும்போது உடனடியாக அடுப்பை அணைத்து விடவேண்டும். 

அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து தயாராகவுள்ள ரசத்தில் ஊற்ற வேண்டும். அவ்வளவு தான். சுவையான, ஆரோக்கியமான, பலவேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும் 'துளசி ரசம்' ரெடி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Tulsi Rasam Recipe Which May Cure Many Infections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->