நயன்தாராவின் 'செம்பருத்தி டீ' பதிவு.. பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம் - சமந்தாவை விமர்சித்த அதே கல்லீரல் நிபுணர் மீண்டும் காட்டம்..!! - Seithipunal
Seithipunal



பிரபல நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீண்டகாலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் இடம் பெற்றிருக்கும் ஒன்று தான் செம்பருத்தி. இதை எனக்கு உணவில் ஒரு அங்கமாக மாற்றியவர் எனது ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இந்த செம்பருத்தியில் செய்யப்படும் டீ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 

ஏராளமான ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள இந்த செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பிரச்சினைகள் மற்றும் கொழுப்பு பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது. இது மிகவும் குளிர்ச்சியானது. சரும நோய்கள் மற்றும் பருவ கால தொற்று நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது. இது மழைக் காலத்திற்கு மிகவும் சிறந்தது" என்று பதிவிட்டிருந்தார். 

பிரபல கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் நயன்தாராவின் இந்தக் கருத்தை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில் " நடிகை நயன்தாரா தனது ஃபாலோயர்களை தவறாக வழிநடத்துகிறார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ள எந்த நன்மைகளும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. 

அவரது இந்தப் பதிவு பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம் போல் உள்ளது. நயன்தாராவின் ஃபாலோயர்கள் தயவு செய்து செம்பருத்தி டீயை தொடர்ந்து குடிக்க வேண்டாம்" என்று விமர்சித்துள்ளார். முன்னதாக இவர் தான் நடிகை சமந்தாவின் மருத்துவ பதிவு ஒன்றையும் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "முட்டாள்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். நயன்தாராவுக்கு இன்ஸ்டாகிராமில் 8.7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hibiscus Tea is Good for Health Or Not


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->