வெறும் சுடு தண்ணீர் தானேனு அலட்சியமாய் இருக்காதீங்க.! அதில் இவ்வளவு விஷயம் இருக்கா.?!
Hot water In empty stomach benefits
அன்றாடம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த தண்ணீரை சுடவைத்து வெண்ணீராக குடித்தால் இவ்வளவு சிறப்பு பலன்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படுவீர்கள்.
மழைக்காலம் ஆரம்பமாகி இருக்கின்ற நேரத்தில் நாம் நோய் தொற்றுகளில் இருந்து வெந்நீர் குடிப்பது நல்லது. காரணம் தற்போது எளிதாக பாக்டீரியாக்கள் பரவ துவங்குவதால் குடிநீரில் அவை பயணிக்கக்கூடும்.
அந்த தண்ணீரை நாம் உடலுக்கு எடுத்துக் கொள்ளும் போது காய்ச்சல், சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே, நீரை சூடு படுத்தும்போது அந்த கிருமிகள் அழிந்து விடும் எனவே நம் உடல் தொற்றுகளில் இருந்து பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது மலச்சிக்கலை போக்குவதுடன் புத்துணர்ச்சியை கொடுக்கும். உடல் நன்றாக இயங்க இது உதவுகிறது. உடலில் ஏற்படும் வாயு பிடிப்பு, தசைப்பிடிப்பு, குறிப்பிட்ட இடங்களில் ஏற்படும் சூடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சீராக்கி உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும்.
வெந்நீர் குடிப்பதால் நம் உடலில் இருக்கும் துளைகள் மூலமாக கழிவுகள் வெளியேறி உடலில் இருந்து மாசுக்கள் அகற்றப்படும். அவ்வாறு உடல் எடையை குறைப்பவர்களுக்கும் இது பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும். கெட்ட கொழுப்புகளை கரைக்க வெந்நீர் உதவுகிறது.
முகம் பொலிவுடன் காணப்பட மற்றும் முகத்தில் இருக்கும் கொழுப்பு கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இந்த வெந்நீர் குடிக்கும் பழக்கம் காணாமல் போகச் செய்யும்.
மன அழுத்தம், சிறுநீரகத் தொற்று, செரிமான பிரச்சனை, ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கும் வெந்நீர் தீர்வளிக்க கூடியது. சிறுநீரக நோய் அபாயங்களில் இருந்து நம்மை காக்க அன்றாட வெந்நீர் உபயோகிக்க கூடிய பழக்கம் உதவுகிறது.
அசைவ உணவுகளை சாப்பிட்டால் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். பலருக்கு ஜீரணம் ஆகுவது மிகவும் சிரமமாக இருக்கும். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு பெரிய அளவில் தொந்தரவாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் வெந்நீர் குடிப்பது ஜீரண மண்டலத்தை மேம்படுத்த உதவும்.
English Summary
Hot water In empty stomach benefits