குஷ்பு கைது, கொந்தளிக்கும் தமிழிசை! - Seithipunal
Seithipunal


பாஜக நிர்வாகிகள், உமாரதி, குஷ்பு-வை கைது செய்த காவல்துறைக்கு, முன்னாள் ஆளுநர் தமிழிசை கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர் தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக  மகளிர் அணி தலைவி திருமதி உமாரதி செயலாளர் பிரமிளா சம்பத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.... 

அதே மதுரையில் டங்சன் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும். திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன்" என்று தமிழிசை தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Protest TN Police DMK Govt Tamilisai Condemn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->