களத்தில் இறங்கும் அதிமுக! அடுத்தடுத்த இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி!
AIADMK EPS Protest announce Kanjipuram Thanjai
சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி காஞ்சிபுரம் மற்றும் தஞ்சையில் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அக்கட்சியின் பொதுச்செயலாலே எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிவிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும்; ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத; கடுமையாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத, மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்;
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்தாத, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும்,
காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 9.1.2025-வியாழக் கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறுவகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடைமாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வரும் ஸ்டாலினின் விடியா திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து,
தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில் 8.1.2025- புதன் கிழமை காலை 10 மணிக்கு ரயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK EPS Protest announce Kanjipuram Thanjai