ரத்த சர்க்கரையால் அவதியா.? அன்றாடம் இந்த ஒரு விஷயம் பெரிய பலனை கொடுக்கும்.!
How To Control diabetics issue Using walking
சர்க்கரை வியாதிக்கு நிறைய மருந்துகள் வந்தாலும் கூட பலருக்கு சர்க்கரையை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத, பக்கவிளைவு கொடுக்காத வழிமுறைகளை பின்பற்ற தான் அனைவரும் விரும்புவார்கள்.
அந்த வகையில், நடை பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஆங்க்கி ஆஷே என்பவர், "உங்கள் உணவை உண்ணும் போது உடலில் கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையாக மாறுகிறது. இதனால், நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவை உடலில் இன்சுலின் திறனை அதிகரிக்கின்றன.
நடைப்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இதனால் ரத்த சர்க்கரை குறைய வழிவகை செய்கிறது. அனைவருக்குமே நடைப்பயிற்சி செய்வது சிறந்ததாக இருக்கிறது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் உயர் ரத்த சர்க்கரையை வெளிப்படுத்துவது இரண்டாவது டைப் நீரிழிவு நோயாக அல்லது இதய நோயாக மாறுகிறது.
சர்க்கரை உள்ளவர்கள் அவர்களது ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க வேண்டும். இந்த சர்க்கரை அளவு கூடவோ குறையவோ கூடாது இதனால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் சிறுநீரகம், நரம்பு, கண் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்துடன் ஒருமுறை முறையாக உடற்பயிற்சி செய்தால் 24 மணி நேரம் வரை ரத்த சர்க்கரை கட்டுப்படும். இருப்பினும், இது தீவிரத் தன்மை கொண்ட ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் செயல்பாடு குறைவாகத்தான் இருக்கும். உடற்பயிற்சி செய்தால் ரத்த சர்க்கரை அளவில் இன்சுலின் திறம்பட செயல்பட உதவுகிறது.
ஓரிரு நிமிட உடற்பயிற்சி கூட ரத்த சர்க்கரையை இயற்கையாக குறைக்க உதவும். குளுக்கோசை மிகவும் திறம்பட பயன்படுத்த இந்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன. எனவே சாப்பிட்டவுடன் 60 முதல் 90 நிமிடங்கள் வரை நடக்கலாம். இதனால், ரத்த சர்க்கரை அளவு குறையும்.." என்று மருத்துவர் ஆஷே தெரிவிக்கிறார்.
English Summary
How To Control diabetics issue Using walking