கால்களில் ஏற்பட்டுள்ள ஆணி பிரச்சனையை, இயற்கையாக சரி செய்வது எப்படி?..!
How to Cure foot Leg Problem
உடல்நல பிரச்னைகளால் எதிர்பாராத விதமாக ஏற்படும் கால் ஆணிகள் தொடர்பான பிரச்சனை ஏற்படும். கடுகை பயன்படுத்தியே நாம் கால் ஆணி தொடர்பான பிரச்சனைக்கு மருந்து தயாரிக்கலாம். இதற்கு முதலில் பாத்திரத்தில் விளக்கெண்ணெயை எடுத்துக்கொண்டு, வறுத்து பொடி செய்த கடகு மற்றும் மஞ்சளை தைலப்பத்தில் காய்ச்ச வேண்டும்.
இதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொண்டு, இரவு நேரத்தில் தூங்கபோவதற்கு முன்னதாக கால்களை சுத்தப்படுத்தி தைலத்தை தடவினால் கால்கள் ஆணி பிரச்சனை சரியாகும். கால்களில் ஆணி ஏற்பட்டால், பூண்டை நசுக்கி அதன் சாறினை கால்களில் ஆணி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
வேப்பிலை இலை மற்றும் குப்பைமேனி இலையை பசையாக அரைத்து மஞ்சள் பொடியை சேர்த்து கால்களில் ஆணி உள்ள இடத்தில் துணியால் கட்டி மூட வேண்டும். இஞ்சி சாற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பை சேர்த்து கால்களில் ஆணி உள்ள இடத்தில் போட்டு வந்தால் கால் ஆணி சரியாகும்.
Tamil online news Today News in Tamil
English Summary
How to Cure foot Leg Problem