மார்பக புற்றுநோயை எப்படி கண்டுபிடிப்பது !!
How to find out your breast cancer
பெண்களின் மார்பகத்தில் ஏற்படும் சிறிதளவு மாற்றத்தைக் கூட அலட்சியம் செய்வது ஆபத்தான விளைவை உண்டாக்கும். இதை கண்டுபிடிக்க, ஒரு மார்பகம் மற்றொன்றை விட சிறியதாக தோன்றினால் அல்லது நீண்ட காலமாக உங்கள் மார்பகத்தில் வலி மற்றும் வீக்கம் இருந்தால், நீங்கள் உடனடியாக அருகில் உள்ள ஒரு நல்ல புற்றுநோய் மருத்துவரை அணுகுவது நல்லது. மார்பக புற்றுநோயின் போது என்னென்ன சோதனைகள் செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு நல்ல புற்றுநோய் மருத்துவர் மார்பக புற்றுநோயை சோதிக்கும்போது, அவர் முதலில் உடல் பரிசோதனை அல்லது மேமோகிராபி சோதனை மேற்கொள்வார். மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கு மற்றும் அதை பரிசோதிப்பதற்கான ஒரு முக்கியமான கருவி மேமோகிராபி எனப்படும் கருவி உதவுகிறது. அதன் உதவியால் குறைந்த அளவிலான எக்ஸ்-கதிர்களின் உதவியுடன் அசாதாரண திசு கண்டறியப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் இமேஜிங் சோதனை அல்லது மார்பக அல்ட்ராசவுண்ட் கருவிகளின் உதவியுடன், மார்பகத்தின் உள் படங்கள் எடுக்கப்படுகின்றன. மேலும் மேமோகிராபி கருவியால் கண்டறிய முடியாத பகுதியை மார்பக அல்ட்ராசவுண்ட் கருவியின் உதவியுடன் கண்டறியலாம்.
உங்கள் மார்பகத்தில் சில அசாதாரண கட்டிகள் அல்லது பிற அறிகுறிகள் காணப்பட்டால், நல்ல புற்றுநோய் மருத்துவர் ஒரு பயாப்ஸி ஊசியின் உதவியுடன் மார்பக திசுக்களை எடுத்து பின்னர் அதை பரிசோதித்து பார்ப்பார். மார்பக பயாப்ஸி ஒரு குறிப்பிட்ட பகுதியில் புற்றுநோயை சரிபார்க்க செய்யப்படுகிறது.
மேலும் உங்கள் மார்பக திசுக்களின் தெளிவான படத்தைப் பெறுவதற்கு மருத்துவர் MRI ஸ்கேன் எடுக்கலாம். எம்ஆர்ஐ சோதனையின் போது காந்தங்கள் மற்றும் ரேடியோ அலைகள் மார்பக புற்றுநோய் உள்ளதா என அறிய பயன் படுத்தப்படுகின்றன. மேலும் அதோடு மட்டுமில்லாமல் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் போது எக்ஸ்ரே பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்கள் மார்பகங்களில் புற்றுநோய்க்கான வாய்ப்பு இருந்தால், புற்றுநோய் மருத்துவர் உங்கள் மார்பக திசு மாதிரியை எடுத்து ஆன்டிபாடிகளின் உதவியுடன் ஆன்டிஜெனை பரிசோதிப்பார். ஒருவேளை முதல் கட்டத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், புற்றுநோய் மருத்துவர் உடனடியாக சிகிச்சையைத் தொடங்குவார்.
இது ஒருவேளை ஆரம்பகால மார்பக புற்றுநோயாக இருந்தால் மருத்துவ சிகிச்சையின் உதவியுடன் குணப்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அந்த புற்றுநோய் மூன்றாம் கட்டத்தை அடைந்தால், பிரச்சனை மேலும் தீவிரமடையும், ஆகையால் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
English Summary
How to find out your breast cancer