மழைக் காலத்தில் ஆயில் ஸ்கின்னை பராமரிப்பது எப்படி?
How To Maintain Oil Skin in Monsoon
ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமத்தில் எப்போதும் ஒரு வித எண்ணெய் சுரந்து கொண்டே இருக்கும். பொதுவாகவே மழைக் காலங்களில் சருமப் பராமரிப்பு என்பது சற்று கடினம் தான். அதிலும் ஆயில் ஸ்கின்னை பராமரிப்பது மேலும் கடினம்.
மழைக் காலங்களில் எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தை எப்படி பராமரிப்பது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
சரும சுத்தம் :
மழைக் காலத்தில் சருமத்திலுள்ள துளைகள் பெரிதாகத் திறந்து கொள்வதால், அதன் வழியே அழுக்குகள் எளிதாக உள்ளே சென்று விடும். எனவே மழைக் காலத்தில் இரண்டு முறை சருமத்தை சுத்தப் படுத்தவேண்டும்.
எக்ஸ்ஃபோலியேட் :
வாரத்திற்கு இரண்டு முறை நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டியது அவசியம். இதனால் சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, அதிகப்படியான எண்ணெய் தேங்குவதும் தடுக்கப்படும்.
க்ளே மாஸ்க் :
வாரத்திற்கு ஒருமுறை க்ளே பேஸ் மாஸ்குகளை பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
சீரம் மட்டும் ஆயில் ஃப்ரீ தயாரிப்புகள்:
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் சீரம் மற்றும் ஆயில் ஃப்ரீ தயாரிப்புகளை மட்டுமே தேந்தெடுத்து சருமத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் போதுமான தூக்கம் :
மழைக் காலத்தில் சரும வறட்சியைத் தடுக்க அதிக தண்ணீர் குடிப்பதோடு, தினமும் 7 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். இது சருமத்தை மேலும் ஆரோக்கியமாக வைக்கும்.
மேக்கப் தவிர்த்தல் :
ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு ரசாயனங்கள் சருமத்துளைகளுக்குள் சென்று விடும் அபாயம் உள்ளதால் கண்டிப்பாக மழைக் காலத்தில் அதிக மேக்கப் போடக் கூடாது.
English Summary
How To Maintain Oil Skin in Monsoon