மலச்சிக்கலை போக்க பருப்பு சூப் - எப்படி செய்வது?
how to make paruppu soup
மலச்சிக்கலை போக்க பருப்பு சூப் - எப்படி செய்வது?
மக்கள் மத்தியில் மலசிக்கல் ஒரு தீராத பிரச்சனையாக உள்ளது. இதற்கு பல முறைகள் உள்ளது. அந்த வகையில் மலச்சிக்கலை போக்க பருப்பு சூப் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, பாசி பருப்பு, நெய் , பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூசணிக்காய், கேரட், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள்
செய்முறை:-
முதலில் துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, பாசி பருப்பு சேர்த்து கழுவி பத்து நிமிடம் ஊறவிடவும். ஒரு குக்கரில் நெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் தக்காளி, பூசணிக்காய், கேரட் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஊறவைத்த பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கலந்து நான்கு விசில் வரும் வரை வேகவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
இவையனைத்தையும் ஒரு கடாயில் போட்டு மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து வேகவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், சுவையான பருப்பு சூப் தயார்.