ஐ.சி.சி. ஜூனியர் உலகக்கோப்பை 2026: தகுதிச்சுற்றில் வரலாற்று சாதனை படைத்த தான்சானியா..!
ICC Junior World Cup 2026 Tanzania creates history in the qualification round
16-வது ஐ.சி.சி. ஜூனியர் (19-வயதுக்குட்பட்டோர்) உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் கொண்ட போட்டியில், மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. தொடரை நடத்தும் உரிமையின் அடிப்படையில் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 5 இடங்களுக்கான அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில், ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தான்சானியா அணி வெற்றிப்பெற்றுள்ளது. அத்துடன், ஐ.சி.சி. ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. மேலும் 2026 ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்று மூலம் முன்னேறிய முதல் அணி என்ற சாதனையையும் தான்சானியா அணி படைத்துள்ளது.
English Summary
ICC Junior World Cup 2026 Tanzania creates history in the qualification round