மன்னிப்பு கேட்கும் இயக்குனர் வசந்த பாலன்...!!! வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு...!!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் 'வசந்த பாலன்', தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களான வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர்.

இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனதுக்கு உருக்கமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது வசந்தபாலன் கூறியதாவது, "தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் வருகைக்கு முன்பு சாதி, தலித் மக்களை பற்றிய பார்வை வேறாக இருந்தது.வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன்.

சிறுபான்மையினரை, மூன்றாம் பாலினத்தவரை நாம் தவறாக காட்டிவிட கூடாது என்று பா. ரஞ்சித் அவரது படங்களின் வாயிலாக நமக்கு கடத்தியுள்ளார்" என்று தெரிவித்தார். 

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Vasantha Balan apologizes showing pig herder villain film Veil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->