உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை கடத்தி 22 பேர் பாலியல் வன்கொடுமை; சிறுவர்களும் அடங்குவதாக அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் 19 வயது பெண்ணை 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி, வாரணாசி நகரின் வடக்கே லால்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண். கடந்த மார்ச் 29-ந்தேதி தோழியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். ஆனால், தோழியை சந்தித்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதன்காரணமாக பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 04-ந்தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதே நாளில் அந்த இளம்பெண்ணை ஒரு கடத்தல் கும்பல் கடத்தியுள்ளனர். அத்துடன் மயக்க மருந்து கொடுத்து அந்த கும்பல் பலாத்காரம் செய்துவிட்டு,  பாண்டேப்பூர் பகுதியில் விட்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர், அவர் எப்படியோ அருகேயுள்ள தோழி ஒருவரின் வீட்டை அடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவருடைய தந்தையிடம் நடந்த விவரங்களை கூற, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடத்திய கும்பல் அந்த இளம்பெண்ணை ஹூக்கா பார், ஓட்டல், விடுதி மற்றும் விருந்தினர் இல்லம் என பல இடங்களுக்கு கடத்தி சென்றுள்ளனர். இதில் பல்வேறு நபர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். அத்துடன், 22 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், ஹகுல்கஞ்ச் மற்றும் லல்லாபுரா பகுதிகளை சேர்ந்த 06 பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களை காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர். 

இந்த கும்பலில் சிலர் சிறுவர்களாக இருக்க கூடும் என்பதற்காக பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட போலீசார் தயக்கம் காட்டியுள்ளனர். அத்துடன், தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ பாலியல் புகாரை அளிக்கவில்லையென மூத்த காவல் அதிகாரி சந்திரகாந்த மீனா கூறியுள்ளார். 

குறித்த பாலியல் வன்கொடுமை புகார் நேற்று அளிக்கப்பட்டதாக அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர்நிருபர்களிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22 people kidnapped and sexually assaulted a young woman in Uttar Pradesh Shocking information that children were also among them


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->