ஜாலியோ ஜிம்கானா!!! நெல்சன் அடுத்த படத்தில் ஜூனியர் NTR ருடன் இணைய போகிறாரா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன், 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கி அனைவரையும் கவனிக்க வைத்தவர். அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'ஜெயிலர்' படம் மூலம் முன்னணி இயக்குனராகவும் தற்போது உயர்ந்து நிற்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள நெல்சன், தற்போது ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்-2' படத்தை இயக்கி வருகிறார்.

இந்த 'ஜெயிலர்-2' படத்துக்கு பிறகு நெல்சன் யாரை வைத்து இயக்க போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அவ்வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான 'ஜூனியர் என்.டி.ஆர்' நடிகருடன் நெல்சன் கைகோர்ப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை ஜூனியர் என்.டி.ஆரும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர்., 'நெல்சன் இயக்கத்தில் படம் நடிக்க ஆசைப்படுகிறார்.

நாக வம்சி (முன்னணி தயாரிப்பாளர்) மனது வைத்து வேகமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்', என்றார்.இதன் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். - நெல்சன் கூட்டணியில் புதிய படம் உருவாக போவதாக தெரிகிறது. இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nelson going team up with Jr NTR his next film


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->