சூர்யாவின் 'வாடிவாசல்'....!அடுத்த அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு....!
Suriya Vaadivasal Producer Thanu gave next update
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் 'வாடிவாசல்'. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார்.

இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாங்கி வருகிறது.கடந்த ஆண்டு, இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் நடிகர் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இதனால் உடனே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் நீடித்துக்கொண்டே வந்தது.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு முடிந்தப் பிறகு 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தின் இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில், "வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும்.
ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிமாறன் 25 நிமிடங்கள் கதை சொன்னார். இந்த 25 நிமிடங்கள் போதும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க என்று அவரிடம் நான் சொன்னேன். அந்த அளவிற்கு திரைக்கதை அருமையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Suriya Vaadivasal Producer Thanu gave next update