உடலில் எந்த பிரச்சனை இருந்தாலும், இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


தினமும் பல்வேறு விதமான சூழ்நிலைகளின் காரணமாக நாம் நமது உணவு பழக்க வழக்கத்தை தொடர்ந்து மாற்றி கொண்டு., உடலுக்கு தேவையான மற்றும் சத்தான பொருட்களை சாப்பிட மறந்து வருகிறோம்.

இயன்ற அளவிற்கு கீழ்காணும் செயல்முறைகளை மேற்கொண்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.

தினமும் ஒரு வெங்காயத்தை தோலுரித்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்., இருமல் மற்றும் சளி பிரச்சனைகள் நீங்கும்.

சுண்டைக்காயில் அதிகளவில் இருக்கும் இரும்புச்சத்தின் காரணமாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் விரைவில் நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகு தானியத்தில் செய்த உணவுப்பொருளை எடுத்துக்கொண்டால் உடல் நலம் அதிகரிக்கும். இதன் மூலமாக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் கிடைப்பதால் உடல் நலம் மேம்படும்.

வேப்ப மரத்தில் கிடைக்கும் வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தும் மறையும்., உடலில் இருக்கும் பித்தம் குறையும்

தினமும் முருங்கைக் கீரை வகை உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயானது எளிதில் கட்டுக்குள் வரும்., நமது கண்பார்வையும் தெளிவாக தெரியும்

அதிக இருமல் ஏற்படும் சமயங்களில் ஒரு சிறிய கரண்டியளவு தேன் சாப்பிட்டு வந்தால் இருமல் எளிதில் குறையும்., சாதாரணமான வாயு பிடிப்பிற்கு சுக்கு மற்றும் பனை வெல்லத்தை கலந்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பானது குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you have any problem with the body, take this kind of food


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->