'டோலோ 650' மாத்திரையை பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கு ஊக்க தொகை-உச்சநீதிமன்றம் தகவல்..!
Incentives for doctors who prescribe 'Dolo 650' pill.
இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தாக்கலில்,
'தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில், விலை உயர்ந்து பரிசு பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் நடைமுறைக்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும்' என, கேட்கப்பட்டு இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில்,
''காய்ச்சலுக்கு அளிக்கப்படும், 'டோலோ 650' மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக, அந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் பணத்தை டாக்டர்களுக்கான ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளது,'' என்று பேசினார் .
இதை கேட்ட பிற நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ''கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்ட போது கூட எனக்கு அந்த மாத்திரைகள் தான் பரிந்துரைக்கப்பட்டன. இது மிக தீவிரமான பிரச்னையாக உள்ளது. இதை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்,'' என, நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.இது குறித்து பத்து நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Incentives for doctors who prescribe 'Dolo 650' pill.