கசகசா சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா..?
kasakasa medicinal properties
கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்துவது. இது சமையல் பொருளாக மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் மருந்தாக உள்ளது.
* கசகசா விதையில் தயாரிக்கப்படும் பேஸ்ட் உடலுக்கு ஈரப்பதத்தையும் சருமத்தை மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.
* இரவில் தூக்கம் இல்லாதவர்கள் கசகசா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேநீர் தயாரித்து இரவில் தூங்குவதற்கு முன்பு அதில் கசகசா விதைகளை சேர்த்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
* கசகசாவில் உள்ள ஜிங்க் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை தூண்டும்.
* கசகசாவில் அதிக அளவில் காப்பர், கால்சியம் சத்துகள் இருப்பதால் எலும்புகள் ஆரோக்கியம் அடையும். எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்கள் வலுப்பெறும்.
* மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துகளான இரும்பு, கால்சியம், காப்பர் போன்ற சத்துக்கள் கசகசாவில் உள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்பு செல்கள் தூண்டப்பட்டு மூளை ஆரோக்கியமாக இருக்கும்.
* மேலும் இதில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். கசகசாவில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்களை குணப்படுத்தும். ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சனை இருப்பவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
English Summary
kasakasa medicinal properties