''கேழ்வரகு'' உணவில் சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மையா..?
Kelvaragu Medicinal properties in tamil
கேழ்வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற நோய்கள் குணமடையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
உடல் எடையை குறைப்பவர்கள் அருமருந்தாக உள்ளது. அரிசி சாதத்திற்கு பதிலாக கேழ்வரகு கூழ் குடித்து வந்தால் விரைவில் எடை குறையும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கேழ்வரகு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் சர்க்கரை அளவு குறையும். இதில் உள்ள லிசிடின், அமினோ அமிலங்கள் போன்றவை கல்லீரலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது.
ரத்த சோகை, ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் கேழ்வரகு உணவில் சேர்த்துக்கொண்டால் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். கேழ்வரகில் இயற்கையாகவே இரும்பு சத்து இருப்பதால் உடல் வலுப்பெறும்.
கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றை போக்க உதவுகிறது. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு கேழ்வரகு நல்ல நிவாரணம் அளிக்கிறது.
உடலின் செயல்பாட்டிலும் சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும் அதிக பங்காற்றுகிறது. மேலும் கேழ்வரகு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள நைட்ரஜன் நிலையை சமபடுத்த உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய், இதய நோய், ஆஸ்துமா, பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் கேழ்வரகு வறுத்து உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
English Summary
Kelvaragu Medicinal properties in tamil