கோவைக்காயில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்..!
Kovakkai natural medicinal properties
கோவைக்காயின் இலை, தண்டு, வேர் அனைத்தும் நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கோவை பழம் சாப்பிடுவதால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இதில் லுப்பியாஸ், லினோக் அமிலம், தையாமின், நையாசின் போன்ற அமிலங்கள் உள்ளது.
கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்து குடிப்பதால் உடலில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயதிலிருந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் குணமடையும். கோவைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோர், மிளகு பொடி, சீரகப்பொடி, இஞ்சி சேர்த்து சாப்பிடலாம்.
இதனை இரண்டு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். மேலும் ஒரு கோவை காயை எடுத்து மோருடன் சேர்த்து நன்றாக அரைத்து குடித்து வந்தால் வயிற்று புண் குணமடையும்.
கோவைக்காயில் இலை, தண்டு போன்றவை கபத்தை குறைக்கும். மார்பு சளி, சுவாசக் குழாய் அடைப்பு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
கோவை பழம் சாப்பிடுவதால் மூச்சு இரைத்தல், வாந்தி, ரத்த சோகை, பித்தம், காமாலை போன்றவை குணமடையும். கோவை இலையை அரைத்து புண்கள் மீது கட்டினால் விரைவில் குணமடையும்.
English Summary
Kovakkai natural medicinal properties