நலன் தரும் முத்திரை: உடல் சூட்டை குறைக்கும் லிங்க முத்திரை..!
Linga Mudra
முத்திரைகள் மூலம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவும். தற்போது உடல் சூட்டை குறைக்கும் லிங்க முத்திரையை எப்படி செய்வது என பார்போம்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து எல்லா கைவிரல்களையும் கோர்த்து இடது கை கட்டைவிரல் மட்டும் நேராக இருக்க வேண்டும்.
சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரையை தினமும் செய்து வர உங்களின் உடல் சூடு குறையும்.