நுரையீரலை பாதுகாக்க கூடிய ஜூஸ்கள் இதோ.!
Lungs Care Juice
நமது உடலில் உள்ள நுரையீரலில் அழுக்குகள் சேர்வதால் நிறைய உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும். நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் இந்த அழுக்குகள் உடலில் இருந்து தானாகவே நீங்க கூடும்.
அந்த வகையில் சில ஆறுகள் நம் உடலில் நுரையீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நுரையீரலை பாதுகாக்க ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலையில் எடுத்துக் கொள்ளலாம்.
அத்துடன் ஆப்பிள், மாதுளம் பழம் உள்ளிட்ட சாறுகளை எடுத்துக் கொள்வது நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
அன்றாடம் தக்காளி மற்றும் அன்னாசி பழச்சாறுகளை சாப்பிட்டால் நுரையீரல் ஆரோக்கியமாக செயல்படுவதுடன் அதில் இருக்கும் அழுக்குகள் அகற்றப்படும்.
முக்கியமாக நுரையீரலை பாதுகாக்க நினைப்பவர்கள் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.