இரட்டை இலை விவகாரம்: இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!
ADMK Irattai Ilai simple Chennai HC EPS OPS
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட மனு குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
மேலும், இது குறித்து அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி, ஏற்கனவே இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்து தெரிந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு நிலூயியில் இருக்கும் போது எப்படி முடிவிடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
ADMK Irattai Ilai simple Chennai HC EPS OPS