மகளிர் உரிமைத் தொகை இன்றே வழங்கிட உத்தரவு பிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்!
Pongal Makalir urimai thogai CM Stalin order
தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் இன்று (9.1.2025) உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000/- வரவுவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pongal Makalir urimai thogai CM Stalin order